தண்டம் செலுத்த மறுக்கும் இங்கிலாந்து!

Friday, May 5th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகின்ற இங்கிலாந்து அதற்கான நஷ்ட ஈடாக  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட  8 5பில்லியன் பவுண்ட்ஸ் (இலங்கை மதிப்பில் 100பில்லியன் } பணத்தை செலுத்த மாட்டாது என Brexit அமைப்பின் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரவித்துள்ளார்.

லண்டனின் ஐ.டி.விக்கு வழங்கிய செவ்விஒன்றிலேயே இதனைத் தெரவித்த அவர் இங்கிலாந்து சட்டங்களின் அடிபடையில் நிர்ண்யிக்கப்படும்  தொகை மட்டுமே செலுத்தப் படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் இதனை நிர்ணயிக்க முடியாது என்றும் தெரவித்தார்.

 இங்கிலாந்து அதன் ஐரோப்பிய ஒன்றிய “உரிமைகள் மற்றும் கடமைகளை அது கடினமானதாக இருந்தாலும் தீவிரமாக நிறைவேற்றும் ஆனால் அதை தீர்மானிப்பது  இங்கிலாந்தாகத் தான் இருக்க முடியும் என்றும் திரு டேவிஸ் தனது செவ்வியில் தெரிவித்தார்.

எந்தவொரு நிதி கோரிக்கைகளையும் முன் வைக்ககா விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின்  பேச்சாளர் மைக்கேல் பார்னியர் அவர்களின் வழி காட்டலில்  நடக்க தான் தயார் என்றும் திரு டேவிஸ் தேரிவித்கார்.

இங்கிலாந்து தனது  உறுப்புரிமை பொறுப்புக்களை தட்டிக் கழிக்கக் கூடது என உஐரோப்பிய ஒன்றியம்  கேட்டுக் கொண்டுள்ளது. ஐரோப்பிய வரவுசெலவுத் திட்டத்திற்கான பங்களிப்பு உட்பட, அதன் உறுப்பினர்களிடமிருந்து பெற்றிருக்கும் பொறுப்புகளை இங்கிலாந்தும் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான டேவிட் டேவிஸின் கருத்து ஐரோப்பிய ஒன்றியதினுள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Related posts: