தடையாக இருப்பது யாரானாலும் நடவடிக்கை – கபீர் ஹாஷிம்!

Friday, August 11th, 2017

அரசின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தாமதமடைவதற்கு நீதி அமைச்சர் விஜேதாஷ காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவியபோதே இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts: