டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 19 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Thursday, April 12th, 2018

சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினரால் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் முதல் நான்கு நாள்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய நீர்நிலைகளில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 19 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதாரத் திணைக்களத்தினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நடுவண் சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினரின் ஏற்பாட்டில் கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைகள் இடம்பெற்றன.

டெங்கு வாரத்தின் ஏழு நாள்களில் முதல் நான்கு நாள்கள் நுணாவில் மேற்கு நுணாவில் மத்தி மட்டுவில் தெற்கு மட்டுவில் வடக்கு கொடிகாமம் தெற்கு தென்மட்டுவில் மட்டுவில் மத்தி ஆகிய பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது 2 ஆயிரத்து 688 இடங்கள் தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டதெனவும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய ஏதுநிலையில் காணப்பட்ட 206 குடியிருப்பாளர்களுக்கு துப்பரவு செய்ய கால அவகாசம் சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பரிசோதனையின் போது நுணாவில் பகுதியில் 5 பேரும் கொடிகாமம் தெற்குப் பகுதியில் 6 பேரும் மட்டுவில் பகுதியில் 8 பேரும் இனங்காணப்பட்டு அங்கு காணப்பட்ட நீர்நிலைகளில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டதால் இந்தக் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: