டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்!

Friday, January 5th, 2018

டெங்கு நொயைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த வருடத்தில் புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடம் டெங்கு காய்ச்சலால் சுமார் 184,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் இது பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசியடெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மக்கள் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை முற்றாக ஒழிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: