டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால்  2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது!

Friday, February 9th, 2018

டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால் இதுவரை  2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்;ளன என தெரிவிக்கப்படுகின்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மண்டலாய் பிரதேசத்தில் டாஸ் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை யப்பான் தூதரக் அதிகாரிகள் நேற்று முன்தினம் பார்வையிட்டதுடன் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக கண்கானிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்

2010ஆம் ஆண்டு முதல் யப்பான் அரசின் உதவியுடன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன இதுவரை 2500 ஏக்கர் நிலத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது இதில் தனிநபர் மிதிவெடிகள் 71 ஆயிரத்து 215,வாகன எதிர்ப்பு வெடிகள் 162 ,வெடிக்காத வெடிபொருட்கள் 19 ஆயிரத்து 925,துப்பாக்கி வெடி ரவைகள் 1 லட்சத்து 747 என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு

கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போதும் வேலைகள் இடம்பெறுவதுடன் 11 அணிகள் தற்போது சேவையில் உள்ளன இதில் தமிழ் ,சிங்களம் , முஸ்லீம் இனத்தவர்கள் வேலை செய்கின்றார்கள் எனவும் அவர்களில் 20 வீதமானவர்கள் பெண்கள் எனவும் டாஸ் நிறுவனத்;தினர் தெரிவிக்கின்றனர்

Related posts: