ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்படவில்லை – பொது பல சேனா !

Sunday, June 11th, 2017

கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்படவில்லை என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது பொது பல சேனாவின் பிரதிநிதியான டிலன்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்

ஞானாசார தேரரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யாகும்

காவல்துறையினரின் தீர்மானம் மட்டுமே உள்ளது இவ்வாறான நிலையில், நீதிமன்ற உத்தரவு உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரின் ஊடாக இவ்வாறு பொய் கூறுவது அவமானமாகும்

ராஜித சேனாரட்ன கூறுவது நகைச்சுவையானது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்

Related posts: