ஜேர்மன் அதிபரர்  மார்க்கலுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Thursday, September 28th, 2017

நான்காவது முறையாகவும் ஜேர்மன் அதிபராக தேர்தலில் வெற்றிபெற்றிக்கும் ஜேர்மன் அதிபர் என்ஜலா மார்க்கலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் தலைவராக நான்காவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, ‘இந்த தேர்தல் வெற்றி உங்களது சிறந்த தலைமைத்துவத்தையும் ஜேர்மன் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது’ என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 அதிபர் தேர்தலில் நான்காவது முறையாகவும் வெற்றிபெற்றுள்ள என்ஜலா மார்க்களுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.ஜேர்மன் அதிபர் என்ஜலா மார்க்கலுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி, மேன்மைதங்கிய கலாநிதி என்ஜலா மார்க்கல்,

அதிபர்,

ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு.

நாட்டின் தலைவராக நான்காவது முறையாகவும் தேர்தலில் வெற்றிபெற்றிக்கும் உங்களுக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களது இந்த தேர்தல் வெற்றியானது உங்களது சிறந்த தலைமைத்துவத்தையும் ஜேர்மன் மக்கள் உங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

 ஜேர்மனியின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் உங்களுடைய ஆழ்ந்த அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கதாகும். உங்களது அறிவு, அனுபவம் மற்றும் வசீகரத் தலைமைத்துவம் ஜேர்மன் மக்களின் தொடர்ச்சியான நன்மைக்கான இலக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.இலங்கையும் ஜேர்மனியும் நெருங்கிய இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. பல்வேறு சர்வதேச விவகாரங்களில் பொது ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் நன்மைகளைப் பகிர்ந்துகொள்வதுடன் ஒத்துழைத்து செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. எங்களுடைய இரு நாடுகளினதும் மக்களின் நன்மைகாக இந்த உறவை மேலும் மேம்படுத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்துள்ளேன்.

உங்களது தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்காகவும் ஜேர்மன் அரசாங்கத்தினதும் மக்களினதும் சுபீட்சத்திற்காகவும் எனது வாழ்த்துக்கள்.

 மைத்ரிபால சிறிசேன

26 செப்டெம்பர், 2017

Related posts: