ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு சிக்கல்!

1451239260-1352 Monday, September 11th, 2017

சரத் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதார விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

எனவே நாளை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் ஐநா மனித உரிமைப் பேரவையின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர். இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படவில்லை. ஆனால் ஐநாவின் சிறப்பு அந்தஸ்துடைய சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகள் எழுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன


அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கும்படி புத்தபிரான் கூறவில்லை - தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு !
பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் - பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா!
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் இறைவரிச் சட்டத்தை திருத்த நடவடிக்கை!
மெக்சிக்கோவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!