ஜப்பானில் அகதி அந்தஸ்த்துக் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, March 1st, 2018

ஜப்பானில் தொழில்வாய்ப்பைப் பெறும்  நோக்கில் அகதி அந்தஸ்த்துக்காக விண்ணப்பிக்கின்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஜப்பானிய நீதி அமைச்சின்புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் 2010ம் ஆண்டு அகதி அந்தஸ்த்துக்காக ஆயிரத்து 202 பேர் விண்ணப்பித்திருந்த போதும், அந்த எண்ணிக்கை 2017ம் ஆண்டு 19 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. இந்தஎண்ணிக்கையில் அநேகமானவர்கள் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் அகதி அந்தஸ்த்துக்காக விண்ணப்பிக்கின்றவர்களுக்கு ஆறு மாதங்களின் பின்னர் அங்கேயே தொழில்புரிவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக பலரும்விண்ணப்பித்திருக்கின்ற போதும் உண்மையில் பாதுகாப்பு பெறும் நோக்கில் இல்லை என்று ஜப்பானிய நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உண்மையில்லாத அகதி விண்ணப்பதாரிகள் அடையாளம் காணப்பட்டு, விரைவாக அவர்களின் சொந்த நாடுகளுக்கே நாடுகடத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

“சிமாட் போல்” ஒப்பந்தத்தில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் பாரிய மோசடி – ஆணையாளரின் அனுதியின்றி பெர...
மசகு எண்ணெயின் விலை அதிகரித்தாலும் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில!
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் - இலங்கை சிறுவர்களுக்கான வைத...