ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, August 17th, 2017

நாட்டின் தேசிய பொருளாதார சபை குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்தும் நோக்கில் இந்த விசேட அலகு உருவாக்கப்பட உள்ளது.பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பொருளாதார செயற்பாடுகள் குறித்தும் அமைச்சரவைக்கு பதில் சொல்லக் கூடிய அலகாக இந்த பொருளாதார சபை உருவாக்கப்படவுள்ளது.பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமைய இந்த தேசிய பொருளாதார சபை நிறுவப்படவுள்ளது.

இது குறித்த வரைவுத் திட்டத்தை பிரதமரின் செயலாளருடன் இணைந்து உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பொருளாதார விவகாரங்கள் குறித்து இந்த சபை தீர்மானங்களை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: