சைட்டம் விவகாரம்: மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் மூவர் விலகல்!

Wednesday, November 15th, 2017

சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளை பதிவு செய்து கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை முன்வைத்த மேன்முறையீட்டை விசாரித்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமிலிருந்து விலகுவதாக நீதிபதி பிரியந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய குழு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அளவில் தமது பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதனையடுத்து குறித்த பிரேரணையை ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்குமாறு சட்டமா அதிபர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts: