சைட்டம் மருத்துவக் கல்லூரியை தடை செய்ய வேண்டும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/saitm-2.jpg)
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்குமாயின் அது அந்த நிறுவனத்தைத் தடை செய்யும் வகையில் மாத்திரமே அமைய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தவிர்ந்த எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
சைட்டம் தொடர்பில் விரைவில் காத்திரமான தீர்மானத்தை அரசு அறிவிக்கும் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.
மகாநாயக்கர்களும் இது தொடர்பில் உடனடியாகத் தீர்வொன்றை அறிவிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல சைட்டம் எந்தக் காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
தபால்மூல வாக்கெடுப்புக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்!
முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து!
நீர் கட்டணத்திற்கும் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வு - அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரி...
|
|