சைட்டத்தினை மூடுவதே தவிர மாற்று வழி  இல்லை – GMOA!

11 Friday, July 7th, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதற்காக எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்வதற்கு பின்நிற்கப் போவதில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)கூறியுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதைத் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று குறித்த அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறியுள்ளார்.

ஆனந்த சமரக்கோன் வெளி அரங்கில் இடம்பெற்ற சைட்டமுக்கு எதிரான மாணவர்களின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். குறித்த இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்து மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே.டி. லால்காந்தவும் சைட்டம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.


அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கு  சரத் பொன்சேகா பதில்!
தனியார் பேருந்து சேவைகள் புறக்கணிப்பு: பாடசாலை மாணவர்கள் பரிதவிப்பு!
உற்பத்தி சுட்டெண் 0.8% உயர்வு!
2018 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன!
தவறுகளை மறைக்கவோ  தப்பிக்கொள்ளவோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டுச் சேரவில்லை - ஈ.பி.டி.பி.