சுமந்திரனால் நிராகரிக்கப்பட்ட  நிதி அமைச்சின் கோரிக்கை!

Monday, May 15th, 2017

ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களுக்கு சிறப்பு வரி சலுகைகளை வழங்க நிதி அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகள் பொதுக் கணக்குகள்மேற்பார்வைக் குழுவால் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரி சலுகைகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்கு 104 மில்லியன் டாலர்கள்  இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான பொதுக் கணக்கு குழு 26 நபர்களுக்கு  வாகன இறக்குமதிக்கான வரி நிவாரணம் வழங்கும்  இந்த உத்தரவுகலுக்கு  அனுமதி அளிக்க வேண்டாம் என நாடாளன்றதிற்கு பரிந்துரைத்துள்ளது.

இந்த மசோதா மீபத்தில்  சுங்கத்துறை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சகதால் தயாரிக்கபட்டுநாடாளுமன்ற அனுமதிக்காக அனுப்பிவைக்கபட்டது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிஏசி அறிக்கையானது தெரிவு செய்யப்பட்ட சில தனிநபர்களுக்கு வாகன இறக்குமதிக்கான  சிறப்பு வரி நிவாரணம் வழங்க அனுமதிக்கிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களுக்கு மட்டும் இத்தகைய வரி ச் சலுகை வழங்குவதென்பது இவர்கள் போன்ற எனை ய நூற்றுக்கணக்கான வர்களுக்கு அநீதி ஏற்படுத்தும் என்று இது தொடர்பில் கருது வெளியிட்ட  திரு சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்த அதிர்ஷ்டமான நபர்கள் யார் என்பதையும் அவர்கள் எந்த அடிப் படையில் இந்தச் சலுகையை பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதையும், நிதி அமைச்சர்  பாராளுமன்றத்திற்கு  வெளிப்படுத்த வேண்டும் எனவும், சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும்தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்  பின்னணிகளையும்  பாராளுமன்றதிறக்கும் நாட்டு மகளுக்கும் வெளியிட வேண்டும் எனவும் நிதி அமைச்சரைக்  கேட்டுக் கொண்டார் சுமந்திரன்.

Related posts: