சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம்!

tamilarnet-90-1200x545_c Friday, April 13th, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உப பொதுச் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது பொதுச் செயலாளர், உப பொதுச் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய செயற்குழுவிடம் பரிந்துரை செய்ய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயத்தின் பின்னர் எதிர்வரும் 18 அல்லது அண்மைய தினமொன்றில் கட்சியின் மத்திய செயற்குழு கூட உள்ளது கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும், உப பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீரவும் கடமையாற்றி வருகின்றனர்

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீர நீக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு கட்சி தீர்மானித்திருந்த நிலையில், பொதுச் செயலாளர் உப பொதுச் செயலாளர் ஆகியோர் இந்த தீர்மானத்தை மதிக்கவில்லை என கட்சியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


ஐயாயிரம் ரூபாய்த்தாளை  இரத்து செய்யும் தீர்மானம் இல்லை -மத்திய வங்கி!
இலங்கை வந்தது இந்தியக் கப்பல்!
சீ.வீ.கே . சிவஞானம் ஒரு சந்தர்ப்பவாதி -  கஜேந்திரகுமார் கடும் சாடல்!
தேர்தலை பிற்போட வேண்டாம் - மஹிந்த தேசப்பிரிய!
வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவோர் குறித்து அறியத்தாருங்கள் - வேலைவாய்ப்பு பணியகம் !