சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம்!
Sunday, May 7th, 2017இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீனக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று காலை விரட்டியடிக்கப்பட்டது.தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத சீனக்கப்பல் ஒன்று மர்மமான முறையில் இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்றது.தமிழகம் வழியாக நுழைய முயன்ற இக்கப்பலை இந்தியக் கடலோரக் காவல்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத சீனக் கப்பல் மீது இந்தியப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்து சீனக்கப்பல் விரட்டப்பட்டுள்ளது.இது குறித்து எந்த அதிகாரபூர்வத் தகவலையும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் இதுவரையில் வெளியிடவில்லை என்ற நிலையில் இலங்கை விளக்கமளித்துள்ளது.
கன்னியாகுமரி வழியாக இந்தியக் கடலில் கொழும்பிலிருந்து கோவாவுக்கு பழுது பார்க்க சீனக் கப்பல் கடந்து சென்றது என இலங்கை விளக்கமளித்துள்ளது.இந்தியக் கடற்படையினரின் சமிக்ஞைக்கு சரியான முறையில் பதில் வராததால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|