சிறைச்சாலைக்குள் மோதல் – வெனிசுலாவில் 29 பேர் பலி!

Saturday, May 25th, 2019

வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி!
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவு...
அரியணை ஏறினார் மலேசியாவின் புதிய அரசர்!
வரி நிவாரணத்தை வழங்குவதற்காக அமைச்சர்களுக்கு இருந்த அதிகாரம் இரத்து!
தமிழ் மக்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதி மொழி!