சிங்களப் பாடகி படுகொலை! கணவர் கைது!

பிரபல பாடகியான பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகத்தில் அவரது கணவரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் அவரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கொரோனா: அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சி - சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்...
யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் தின நிகழ்வுகள்!
|
|