சாலை சமிக்ஞைகளால் விபத்து: பாதசாரிக் கடவைகளை மாற்றுக!

Sunday, October 8th, 2017

யாழ்ப்பாணத்தில் சாலை சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரி கடவைகளை மாற்றியமைக்காத காரணத்தால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணத்திலுள்ள முதன்மைச் சாலைகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பணி முழுமையடையவில்லை. நாளாந்தம் சமிக்ஞைகள் உள்ள சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

சிவப்பு விளக்கு அணைந்து வாகனம் புறப்படுவதற்கான சமிக்ஞை விழும் போது ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள பாதசாரி கடவைகளில் மக்கள் கடக்கின்றனர். வேகமாகப் புறப்படும் வாகனங்கள் அவர்களை மோதித் தள்ளுகின்றன. அதனால் வாகனச் சாரதிகளும் சிக்கலை எதிர்கொள்கின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதசாரி கடவைகளை மாற்றி அமைக்க  வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வீதிச் சமிக்ஞை பொருத்தப்பட்டுள்ள வேம்படிச் சந்தியிலுள்ள பாதசாரிக்கடவையைத் திருத்தி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன. ஏனைய கடவைகளும் விரைவில் மாற்றியமைக்கப்படும். இதனால் விபத்துக்களைத் தவிர்க்கமுடியும் என சாலை அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்தனர்.

Related posts: