சரணடைந்தார் ஞானசார தேரர்!

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் சட்டத்தரணி ஊடாக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். தேசிய பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரரை மிரட்டியமை மற்றும் குரானை அவமதித்ததாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனினும் ஞானசார தேரர் இந்த வழக்கில் முன்னிலையாகாமை காரணமாக கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக்கோவை இலக்கம்!
நேற்றும் 12 விபத்து மரணங்கள்!
அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்...
|
|