சமூக வலைத்தளங்கள் தொடர்பில்    விசேட பேச்சுவார்த்தை!

download (1) Monday, March 12th, 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, கடந்த 7ம் திகதி முதல் தொடர்ந்து இந்த தடை அமுலில் இருக்கிறது.

இதனை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில், இன்றையதினம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்தவிடயம் குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

இதன்போது குறித்த தடையை நீக்குவதா? அல்லது இன்னும் சில தினங்களுக்கு தடையை நீடிப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்டன  சமூக வலைத்தளங்கள்!
இயற்கையின் தாண்டவத்தில் 202 பேர் உயிரிழப்பு!
சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு கோரும் உடற்கல்வி ஆசிரியர்கள்!
கொல்வின் சைட்டம் ஆதரவாளர்– குற்றம் சுமத்துகிறார் பேராசிரியர் காலோ பொன்சேகா!
மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் - மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம்!