சந்திரிகாவின் நல்லிணக்க வடிவத்தை ஏற்றுக்கொண்டார் மைத்ரிபால சிறிசேன !

Monday, May 8th, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத் திற்கான அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க கொள்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது  ஒப்புதலை அமைச்சரவைக்கு வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் வரலாற்றில்  தேசிய நல்லிணக்க கொள்கையை ஏற்றுக்கொண்ட முதல் அரசாங்கமும்,அமைச்சரவையும்  என்கின்ற வரலாற்று பெருமையை தற்போதைய அரசாங்கமும் அதன் அமைச்சரவையும் பெற்றுக்கொள்கிறது என  தேசிய நல்லிணக்க சபை தெர்வித்துள்ளது.

கடந்த  2015ம் ஆண்டு  செப்டம்பரில் தொடங்கிய, மறுசீரமைப்பிற்கான தேசிய நல்லினக்க கொள்கை ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகள் பலதரப்பட்டவர்களுடனான தொடர்   ஆலோசனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கான பல் விளக்கங்கள், போன்றவற்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்  வழிகாட்டுதலின் கீழ்,தொடராக நடத்தியதாக ஓன்றியத்தின்  முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 2016 வரை நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சு, நீதி, கல்வி,மற்றும்  மகளிர் விவகாரங்கள், கூட்டுறவு ஆகிய அமைசுக்கள் உட்பட  இதர பல அமைச்சகங்கள், திணைக்களங்கலின் தலைவர்கள், மூத்த மாகாண சபை அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக  செயற்பாட்டாளர்கள் என பலதரப் படவர்களுடன் விரிவான ஆலோசனைகள் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட பலதரப்பட்டவர்களுடனும்  தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம்  தொடர்பில் விரிவான ஆலோசனைகள் நடத்தப் பட்டதாகவும் அவர் தெரவித்தார்.

மாநிலங்களின் நல்லிணக்க முன்னெடுப்புகள்  அவற்றின் தொடர்ச்சி என்பவற்றை  உறுதி செய்வதற்கு, LLRC அறிக்கை, உடலகம கமிஷன் மற்றும்  பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் மற்றும்  முன்னைய  தேசிய நல்லிணக்க  முன்னெடுப்புகள் தொடர்பான ஆவணங்கள் என்பனவும் ஆராயப் பட்டன.

தேசிய நல்லிணக்கக் கொள்கையானது  அதன்  நடைமுறைப்படுத்தல் வியூகத்தையும்  உள்ளடக்கியது, இதில்  வரையறுக்கப்பட்ட மதிப்புகள் முக்கியமாக இருக்கும், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தற்போதுள்ள தேசிய முயற்சிகளின் வருடாந்திர வேலைத் திட்டங்கள் மூலம் நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் நடை முறைப் படுத்தப் பட வேண்டும் எனவும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத் திற்கான செயலைகத்தின் அந்த அதிகாரி தெரவித்தார்  .

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான இந்த தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலகம் நாட்டின் தேசிய கொள்கை  ஒன்றை உருவாக்கியுள்ளது இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அணைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும்  அரசாங்கத்தின் அணைத்து வளங்களும் இதற்கு பயன் படுத்தப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரித்துள்ளார்.

மேலதிக  கலந்துரையாடல்கள் மற்றும் திருத்தங்களைத் தொடர்ந்து, தேசிய நல்லிணக்க கொள்கையின்  இறுதி வரைவு ஜனாதிபதியால்  அமைச்சரவைக்கு வழங்கப்பட்டது.

Related posts: