சட்டவிரோதமாக பனை தறித்தலுக்கான தண்டனைச் சட்டம்! 

Tuesday, March 27th, 2018

சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிக்கும் செயற்பாடுகள்  அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டவிரோத பனை தறித்தலுக்கான தண்டனைச் சட்டங்கள்கடுமையாக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச்சபை அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை வளத்தினை வாழ்வாதாரமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படும் நிலையில் அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளது.

இந்த நிலையில் பனை வள அழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பனைவளத்தினைப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்காகவும் இலங்கையில் 1993ஆம் ஆண்டு மரங்களைத்தறித்தல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், பனை தறித்தலானது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பனை மரங்கள் தறிப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பனை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலகங்கள் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: