சட்டம் ஒழுங்குகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

Friday, February 2nd, 2018

சட்ட ஒழுங்குகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

113 நாடுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை 59 ஆம் இடத்தில் உள்ளது.

முன்னைய பட்டியலைக் காட்டிலும் இலங்கை 9 இடங்களில் முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கை, தெற்காசிய நாடுகளில் சட்ட ஒழுங்குகளை பேணும் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிக்கான உலக வேலைத்திட்டம் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது.

Related posts: