க்ளைபோசேட் கொண்ட பாரவூர்தி திறப்பு – சுங்க திணைக்களம்!

download (12) Friday, April 13th, 2018

கடந்த 4 தினங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட க்ளைபோசேட் கொண்ட பாரவூர்தியை திறக்க தீர்மானித்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

40 அடி நீளமான குறித்த பாரவூர்தி ஒருகொடவத்தையில் உள்ள சுங்க பிரிவில் உள்ள களஞ்சிய சாலையில் வைத்து திறக்கப்படவுள்ளதாக, திணைக்கள பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும் இரசாயன மருந்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.