கோட்டாபய ராஜபக்ஷவின் மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு!
Thursday, September 12th, 2019எவன் கார்ட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை தவறானது என்பதனால் தன்னை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது.
குறித்த உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 11.4 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை சட்ட விரோதமானது என தெரிவித்து தன்னுடைய சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவை நிராகரித்து தொடர்ந்தும் வழக்கை நடத்திச் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|