கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Friday, August 9th, 2019

இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கொச்சின் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் எயார்லைன்ங் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வௌ்ளத்தினால் 1 கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளதோடு நிலச்சரிவு காரணமாக 150- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனைத்து நாடுகளிலிருந்தும் கொச்சின் விமான நிலையத்திற்கு செல்லும் விமான சேவைகள் இரத்துச் செய்ப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையிலிருந்து கொச்சின் விமான நிலையத்திற்கு செல்லும் ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு உங்களது பயண முகவருடனோ அல்லது கொச்சியில் உள்ள இலங்கை விமான சேவையின் +914842362042 இலக்கத்துடனோ அல்லது இலங்கை விமான சேவையின் 24 மணிநேர சேவை +94117771979 24 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது

Related posts:


இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய த...
மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான...
நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீ...