கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதிக்கு நிபந்தனையின்றி ஆதரவு ?

அரசாங்கத்தில் இருந்து விலகினால் ஜனாதிபதிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்க நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்க தயார் என கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இன்று முற்பகல் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இச்செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்கு மத்தியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமாயின், அதற்கு ஆதரவளிப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலொன்றை உடனடியாக நடத்துவற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
Related posts:
|
|