குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர்!

நாட்டில் அதிகரித்து வரும் திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நேற்று கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு பொலிஸ்மா அதிபர் இந்த குறிப்பிட்டார்,
விசேட அதிரடிப்படை திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு என்பவற்றுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.
Related posts:
இலங்கை கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது – ஒன்று கூடினால் ஐரோப்பாவை போன்று ...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நன்கொடையாக இலங்கை தேயிலை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு – வைத்தியச...
|
|