கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்கள் பெரும் அவதி!

Saturday, June 23rd, 2018

இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவில்லை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைப்பிரிவு என்பன ஆரம்பிக்கப்படாமையினால் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டிய சிறுநீரக நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வெளி மாவட்ட வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தினது மக்களுக்கும் ஏனைய அயல் பிரதேசங்களான மல்லாவி, வவுனிக்குளம், விசுவமடு உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற சுமார் இரண்டு இலட்சம் வரையான மக்களுக்கு மருத்துவத் தேவையை வழங்குகின்ற ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையாகக் காணப்படுகின்ற கிளிநொச்சி வைத்தியசாலையில் இருக்க வேண்டிய சிகிச்சைப் பிரிவுகள் பல இதுவரை ஆரம்பிக்கப்படாமை மற்றும் போதிய வசதிகள் இன்மையால் இங்கே சிகிச்சை பெற வருகின்ற நோயாளர்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு அதிக பணத்தையும் நேரத்தையும் செலவழித்துச் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இதுவரை இரத்த சுத்திகரிப்பு, சிகிச்சைப் பிரிவு என்பன ஆரம்பிக்கப்படவில்லை.


வடமராட்சியில் பொலிஸார் துப்பாக்கி சுடு:  ஒருவர் பலி!
அடுத்துவரும் 8வருடத்திற்கான பொருளாதார கொள்கை வெளியீடு!
அத்தியாவசியமானது புகையிரத சேவை: கைச்சாத்தானது  சிறப்பு வர்த்தமானி!
போலி கல்விச்  சான்றிதழுடன் விரிவுரையாளர் பதவி? - யாழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என தகவல்!
வடக்கின்  கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளேன் - ஆளுநர் ரெஜினோல்ட் குரே!