கிராமியப் பாலங்கள் 500 அமைக்க நடவடிக்கை!

Wednesday, May 30th, 2018

கிராமங்களிலுள்ள 500 பாலங்களை அமைக்கவென பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு இரண்டு ஒப்பந்தங்களில் கடந்த வாரம் கொழும்பில் கைச்சாத்திட்டது.

இந்த திட்டத்துக்காகப் பிரிட்டன் நிறுவனம் 250 பாலங்களை அமைக்கவென 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுணையும் நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் 50 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றன.

அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நடவடிக்கையின் பயனாக இந்த அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கைக்குக் கிடைக்கின்றன.

இதனால் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் கிராமங்களில் அமைந்துள்ள பலகையிலான மற்றும் தொங்கு பாலங்கள், சேதமாகியுள்ள பாலங்கள் உள்ளிட்ட கிராமத்துக்குக் கிராமம் செல்ல முடியாத நிலையிலுள்ள பாலங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு அந்த விடயங்களில் புதிய பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சால் எடுக்கப்பட்டுள்ளன.

Related posts: