காலி முகத்திடலில் திரண்ட மக்கள் கூட்டம்!

Monday, May 1st, 2017

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் பங்கெடுத்துள்ளனர்.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கூட்டு எதிர்க்கட்சியான மஹிந்தவின் ஆதரவாளர்களால் காலி முகத்திடலிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியால் கண்டியிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.இதில் காலி முகத்திடலில் திரண்டுள்ள பெருமளவிலான மக்கள் கோசங்களை எழுப்பிக்கொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடலில், மணல் தெரியாதவாறும், கடல் தெரியாதவாறும் மக்கள் கூட்டம் எவ்வாறு திரளப் போகிறது என்பதை பார்த்துக்கொள்ளுமாறு ரோஹித அபேகுணவர்தன அண்மையில் சவால் விட்டிருந்தார். அவர் குறிப்பிட்டதைப் போன்று அலைகடலென மக்கள் திரண்டதை காணக்கூடியதாக உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.