காலி முகத்திடலிலும் மனித எலும்புக் கூடுகள்

Monday, May 15th, 2017

கொழும்பு காலி முகத்திடலிற்கு முன்பாக அமைக்கப்பட்டுவரும் “ஷாங்ரிலா” என்னும் ஹோட்டல் கட்டுமான இடத்திலிருந்து பல மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன .இந்த இடத்தில் முன்னர் இலங்கை இராணுவத் தலைமையகம் அமைந்திருந்தது  எனச் சொல்லப்படுகிறது.

கொங்கொங் நாட்டின் Shangri லா என்கின்ற நிறுவனம் முந்தைய மஹிந்த அரச  காலத்தில் ஆடம்பர ஹோட்டல் நிர்மாணிக்க  இந்த 10 ஏக்கர் காணியை $ 125 மில்லியன் டொலருக்கு வாங்கியது

இந்தக் காணியில் கட்டு மானப் பணிகளின் போது நேற்று முன்தினம்  கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரச பகுப்பாய்வு திணைக்களதின் உதவி கோரப் பட்டுள்ளதகவும் தேர்விகப் படுகிரறது.

பிரித்தானியரின் ஆட்சிக் களத்தில் இந்தப் பகுதி ஒரு கல்லறையாகப்  பயன்படுத்தப்பட்டது. என இராணுவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன,

Related posts: