காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகல்!

பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகுக்கு தீங்கு ஏற்படும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் படி 2015ம் ஆண்டு காலநிலை மாற்ற உடன்படிக்கை பாரிஸில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இதன்படி பாரிய தொழிற்சாலைகளுக்கான காபன் வெளியேற்ற கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா சீனா பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இணக்கம் கண்டிருந்தன.
ஆனால் காலநிலை மாற்றம் குறித்த விடயத்தில் நம்பிக்கை இல்லாத டொனால்ட் ட்ரம்ப் இதனை ரத்து செய்து, அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பு வழங்கவிருப்பதாக தேர்தல்காலத்தில் அறிவித்திருந்தார். இதன்படி இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
வங்கி கடன்கன் வட்டிகளை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்த...
சதொசவிடமிருந்து சலுகை விலையில் புத்தாண்டு நிவாரணப் பொதி - இந்தியா வழங்கும் 40,000 மெட்ரிக் தொன் அரி...
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சினால் இலங்கைக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு!
|
|