காணாமல் போனோர்:  வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்து!

fdgggfgfg Wednesday, September 13th, 2017

யுத்தகாலத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானியில் அவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி இதில் கைச்சாத்திட்டுள்ளார்.இதன்படி இந்த மாதம் 15ம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் கடமைகள் மற்றும் இலக்குகள் செயற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது