களுத்துறை சிறைச்சாலை ஆணையாளர் இடமாற்றம்

Wednesday, May 17th, 2017

சிறைச்சாலை மறுசீரமைப்புகள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்  களுத்துறை சிறைச் சாலை  ஆணையாளரை உடன் இடமாற்றம் செய்யும்படி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளர்.  அண்மையில் களுத்துறையில் சிறைச்சாலை பேருந்தின்மீது நடாத்தப்பட்ட சூட்டுச் சம்பவம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் சுயாதீன விசாரணையை நடத்தி உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறும்  அறிவுரை வழங்கியுள்ளார்.

களுத்துறை சிறைச் சாலை  ஆணையாளரை இட மாற்றம் செய்யும் முடிவை மேற்கொண்டதற்கு  பின்வரும் காரணிகள் கரிசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. என்று அமைச்சர் கூறினார்.

1.27.02.2017அன்று களுத்துறையில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மூன்றுநபர் குழுவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும்

2.சிறைச்சாலைக்குள் நடைபெற்ற சண்டையில் ‘சமையன்’ என்பவரின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் குறித்து ஊடகங்களில்  வெளியான செய்திகள்

3.களுத்துறை சிறைச்சாலை சமையலறைக்கு எடுத்து வரபட்ட கோவா பொதியிலிருந்து  செல்போன் மற்றும் போதைப் புகையிலை என்பன கண்டெடுக்கப்பட்டமை.

இவை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால் அவர்களின் தராதரம் பாராது தண்டிக்கப் படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts: