ஓய்வு பெறுவதற்கான வயதுடைய ஆசிரியர்களுக்கு சலுகை!

Saturday, March 24th, 2018

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கான கால எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த சலுகையானது 58, 59 ஆகிய வயது எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு கிடைக்கவுள்ளது.

இம்மாத இறுதியில் ஒரே தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக தரம் ஆறுக்கும் பதினொன்றுக்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்களுக்கான இடமாற்றம்அமுலாகவுள்ளது. இதனால் நீண்டகாலமாக கற்பித்து வரும் ஆசிரியர்களை அவர்களின் விருப்பத்திற்கு அமைய உரிய பாடசாலையில் கற்பிக்க இடமளிக்குமாறு அமைச்சர் பணிப்புரைவழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் தரம் ஆறுக்கும் பதினொறுக்கும் இடைப்பட்ட வகுப்புகளுக்கான ஐயாயிரத்து 500 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

Related posts:

விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் - பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜ...
விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் - பிரதமர...
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறு...