ஒருமித்த நாடு என்கிற சொல் பொருத்தமற்றது – இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்!

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையிலிருந்து ஒருமித்த நாடு என்ற சொற்பதம் நீக்கப்படவேண்டும் என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்களச் சொல்லுக்கு ஒருமித்த நாடு என்கிற தமிழ் பொருத்தமானதல்ல என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசமைப்புத் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. ஏக்கிய ராஜ்ஜிய, ஒருமித்த நாடு ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொற்பதத்தின் சரியான மொழிபெயர்ப்பு ஒருமித்த நாடு அல்லவெனச் சுட்டிக்காட்டப்பட்டது. இடைக்கால அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒருமித்த நாடு என்பது பல பிராந்தியங்களை இணைந்த நாட்டையே குறிக்கும். இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒருமித்த நாடு என்பது ஏக்கிய ராஜ்ஜியவுக்குப் பொருந்தாது. இது ஒற்றையாட்சியை நீக்கும் அரசின் செயற்பாடு. இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம் என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது
Related posts:
|
|