ஒக்டோபரில் வாக்காளர் பெயர்ப் பட்டியல் உறுதிசெய்யப்படும்- மேலதிக தேர்தல் ஆணையாளர்!

2017 ஆம்ட ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியல் அடுத்த மாதம் 12ஆம் திகதி உறுதி செய்யப்படும் என்று தேர்தல்கள் செயலகத்தின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெயர்ப் பட்டியல் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட இருந்தது. எனினும், மாவட்டமட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளர்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட வேண்டி இருப்பதனால், சற்று காலதாமதமானது என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இடம்பெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு 2017 புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பயன்படுத்தப்படும் என்று திரு மொஹமட் மேலும் தெரிவித்தார்
Related posts:
கச்சதீவு புனித திருவிழாவில் கொரோனா தொடர்பில் கவனம் - இலங்கை கடற்படை!
உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு - இலங்கை பெற்றோலியக் கூட...
பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - ந...
|
|