ஏற்றுமதி இல்லாத அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – அமைச்சர் ஹர்ஷ டி சில்வா!

ஏற்றுமதி இல்லாமல் இந்த நாட்டில் அபிவிருத்தி ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு எதிரான யோசனை மீது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பு மூலம் மேலதிக 317வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போது பிரதி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று அங்கு சென்றிருந்தது.
இது தொடர்பாக இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இந்த நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேசத்துடன் ஒன்றிணைப்பதற்கு அரசாங்கம் முக்கியத்தும் வழங்குவதாக கூறினார்.
Related posts:
நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கு பிணை!
சில தினங்களில் முடிவெடுக்கப்படும் – இராணுவத்தளபதி!
கொழும்பு மாவட்டத்தின் காற்று மாசுபாட்டுக்கு வாகன புகையே அதிகளவான காரணம் - மோட்டார் போக்குவரத்து ஆணைய...
|
|