எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக வெளிப்படுத்துங்கள் – கனியவள தொழிற்சங்கம் கோரிக்கை!

download Wednesday, July 11th, 2018

எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக பிரசித்தப்படுத்துமாறு கனியவள தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இது தொடர்பில் அதிகாரிகள் இன்று எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க எதிர்ப்பார்ப்பதாக கனியவள பொது பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் பெற்றோல் 92 ஒக்டேய்ன் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும் 95 ஒக்டேய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவாலும்இ சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேநேரம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாதாந்தம் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எண்ணெய் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.