எரிபொருள் விலைச் சூத்திரம் அமுல்: எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

petrol_pump Monday, April 16th, 2018

உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தை மே 01ம் திகதி தொடக்கம் அமுலுக்கு கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளதாக அரச தரப்புதகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் இரு வார காலப்பகுதிக்குள் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின், எரிபொருள் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, எரிபொருள் விலைகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தில் தற்போது பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 14 -16 ரூபா வரையிலும், டீசல் லீற்றர் ஒன்றுக்கு 6 – 9 ரூபா வரையிலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 48ரூபாவும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு  38 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதியமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!
மெக்ஸிக்கோ மக்களுக்கு நியூயோர்க்கிலிருந்து ஜனாதிபதி அனுதாபம்!
உயர்தரத்துக்குத் தெரிவானோர் சிறந்த பாடங்களையே தெரிவு செய்யவேண்டும்  - உடற்கல்வி சங்கத் தலைவர் !
எரிபொருள் விலைகள் உயர்வடையும்?
அவுஸ்திரேலியாக் கண்டத்துடன் வர்த்தக உறவைப் பலப்படுத்தும் இலங்கை!