எனது பதவி நீக்கம் திட்டமிட்ட ஒரு சதி – டெனீஸ்வரன்!

விசாரணைக்குழு இரு அமைச்சர்களைத்தான் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரைத்த போதே, நான்கு அமைச்சர்களையும் மாற்றுவதற்கு ரெலொ அமைப்பின் தலைவர், முதலமைச்சருக்கு சம்மதம் தெரிவித்திருந்தார். பிழையே செய்யாத என்னை மாற்றுவதற்கு எமது கட்சியின் தலைமை முன்னரே முடிவெடுத்து விட்டு, இப்போது யாப்பு விதிகளை மீறிவிட்டதாகச் சப்பைக்கட்டு காரணங்களை புனைந்து கொண்டிருக்கின்றனர். பிழை செய்யாதவரை நீங்கள் திட்டமிட்டு சதி செய்து வெளியே அனுப்புவதற்குரிய தண்டனைகளைக் கடவுள் நிச்சயம் வழங்குவார். என வடக்கு மாகாணப் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு எதிராகக் கையெழுத்திட்டமை தொடர்பில் விளக்கம் கோரி எனக்குக் கடிதம் அனுப்பப்பட்ட நேரத்தில், என்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தெரிவித்து அமைச்சரவயைிலிருந்த நீக்குமாறு முதலமைச்சருக்குக் கட்சிக் செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.
முதலமைச்சர் நிமித்த விசாரணைக்குழு என்னை விடுவித்த பின்னரும் நான் ஊழல் செய்யவில்லை என்ற தெரிந்த பின்னரம் என்னைப் பதவி நீக்க முதலமைச்சருக்கு எனது கட்சி இணக்கம் தெரிவித்தத கட்சியில் இருக்கின்ற அமைச்சர் ஊழல் செய்யவில்லை என்றால் அவரைப் பாதுகாக்க வேண்டும். அனால் அதை விடுத்து என்னை அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் கட்சித் தலைமை குறியாக இருந்தமையை இதிலிருந்து அறியமுடியும்.
நான் விசாரணைக்குழுவில் தோன்றமாட்டேன் என்பதால் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் காத்திருப்பதாக கூறியுள்ளார். விசாரணைக்குழ முன்பான நான் தோன்றமாட்டேன். என்று சொல்லவில்லை. சட்ட ரீதியான சுயாதீனமான எந்தவொரு விசாரணைக்குழு முன்னிலையிலும் தொன்றுவதற்க தயாராக இருக்கின்றேன். என்ற திரும்பத் திரும்பக் கூறியுள்ளேன். தெரிவுக் குழுவை அமைக்குமதாற முதலமைச்சரைக் கோரியிருந்தென். அதைச் செய்யத் துணிவில்லாத முதலமைச்சத். நான் தனானால் நியமிக்கபடும் விசாரணகக்குழு முன்பாகத் தோன்றமாட்டேன் என்பதற்காக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றார் என்றார்.
Related posts:
|
|