எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் தேசிய சட்ட வாரம் -இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

Thursday, May 3rd, 2018

2018 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட வாரம் மே 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ் ஆண்டுக்கான தேசிய சட்ட வாரமானது “சட்டத்தை மதிக்கும் சமுதாயத்திற்காக வழக்கறிஞர்கள் சமூகம்” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய சட்ட வாரம் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட 10 மத்திய நிலையங்களில் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: