எதிர்வரும் வாரம் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வெளிவரும்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் வாரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறை உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி மன்றங்களில் கூட்டங்களை நடத்தும்போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படும் என பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் சில பிரதேச சபைகளில் குறுகிய எண்ணிக்கையிலானவர்களே ஒன்றுகூடுவதற்கான நிலைமை உள்ளது. எனவே அத்தகைய உள்ளூராட்சி அதிகார சபைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ரோஹன ஹெட்டியாரச்சி வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினரு...
குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்...
|
|