எண்ணெய்த் தாங்கிகள் விற்பனை செய்யப்பட்டால் போராட்டம் !

aa1 Saturday, July 15th, 2017

ஹம்பாந்தோட்டை எண்ணெய்த் தாங்கிகள் விற்பனை செய்யப்பட்டால் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் பெற்றோலிய வள தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் உடன்படிக்கை கைச்சாத்திட உள்ளதாக தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எண்ணெய்த் தாங்கிகளை சீனாவிற்கு விற்பனை செய்ய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் அன்று முதல் போராட்டம் வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை விற்பனை செய்வது குறித்து எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அதற்கு அரசாங்கம் சாதகமான பதிலளித்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெடிக்கும் என நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…