உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிட தொடர்ந்தும் தாமதம்!

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட இன்னும் சில தினங்கள் செல்லும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது..
குறிப்பிட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெறுவருவதாகவும் அரசாங்க அச்சுத் திணைக்கள தலைவி கங்கானி லியனகே தெரிவித்தார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,689 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதை மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போட்டிருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தப்பா ஊடகவியலாளர் சந்திப்பொன்றி கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
அரசியல் பேசி நோக்கத்தை குழப்பாதீர்கள் - சி.வி.க்கு ஜோன்ஸ்ரன் சாட்டை!
இராணுவத்தினரால் யாழ். நகரப்பகுதியில் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு!
|
|