உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

Thursday, February 8th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து 10 கண்காணிப்பாளர்களை வரவழைக்கத்தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைக்காக இந்தியாவிலிருந்து நால்வரும் கொரியா மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவரும்வரவழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி தேர்தல் நடைபெறும் நேரத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: