உள்ளூராட்சி தேர்தலின் எதிரொலி: ஜனாதிபதி, பிரதமர் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர கூட்டம்!

maithiri & ranil_CI Monday, February 12th, 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை கொண்டுவந்துள்ளது.

குறித்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னணி  நாடு முழுவதுமுள்ள அதிக சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியீட்டியுள்ளது.

மகிந்த ராஜபக்ஷவின் குறித்த வெற்றியினால் நல்லாட்சி அரசாங்கம் பாரிய பின்னடவை சந்தித்துள்ளதுடன் நாட்டின் அரசியலிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளதாக காணமுடிகின்றது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லாட்சி அரசிலிருந்த  விலகுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் தொடர்பில் அராய்வதற்காக சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றார் என ருவிற்றார பதிவில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே நல்லாட்சி அரசிலிருந்து  வெளியெறுவதா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீPசேனவும் நாளையதினம் விஷேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் எனவும் இது தொடர்பாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளையதினம் விஷேட சந்திப்பொன்றை மேற்கொள்ள்வுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆழும் தரப்பில் உள்ள இரு தலைவர்களும் அவசரமாக தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டி பேச்சுக்களை நடத்துவதால் நல்லாட்சியின் எதிர்காலம் தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பதற்றநிலை காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.


நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவசியம் தேவை - பிரதமர்
வடபகுதி அபிவிருத்தியில் இராணுவத்தினர் - றெஜினோல்ட் குரே !
அமெரிக்காவில் 50 பேரை பலியெடுத்த துப்பாக்கி சூடு: பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு!
தலைவர்களை கொல்ல முயன்றவர்கள் எப்படி அரசியல் கைதிகளாவர்? - பிரதி நீதியமைச்சர் துஷ்மந்த மித்திரபால!
512 கைதிகள் விடுதலை - சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!