உள்ளுராட்சி உதவியாளர்கள் 21 பேருக்கு 18 வருடங்களின் பின்னர் பதவி உயர்வு!
Tuesday, July 10th, 2018வடக்கு மாகாணத்தில் உள்ள 21 உள்ளுராட்சி உதவியாளர்களுக்கு 18 வருடங்களின் பின்னர் வகுப்பு 1 இற்கான பதவி உயர்வு வடமாகாண சபை முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் திருமதி வி.கேதீஸ்வரனினால் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்களிலும் உள்ளுராட்சி திணைக்களங்களிலும் பணியாற்றும் 21 உள்ளுராட்சி அமைச்சுக்களிலும் உள்ளுராட்சி உதவியாளர்களுக்கே வடக்கு மாகாண உள்ளுராட்சி உதவியாளர் சேவை வகுப்பு 1 இற்கான பதவி உயர்வு வழங்கப்பட்டு பதவி உயர்வு கடிதங்கள் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி உதவியாளர்களுக்கு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிறைஞ்சன் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பதவி உயர்வுக் கடிதங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பாக திணைக்கள தலைவர் ஊடாக அறியத்தருமாறு அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை வடக்கில் அனுமதிக்கப்பட்ட 26 உள்ளுராட்சி உதவியாளர் தொடர்பான ஆளணி அனுமதி மற்றும் 16.05.1999 முதல் செயற்படும் படியான நடைமுறையில் இருக்கும் சேவைப்பிரமாணக் குறிப்பு வடக்கு மாகாண பொதுச்சேவையின் ஆணைக்குழுவின் செயலாளரது 29.09.2017 அனுமதிக்கப்பட்ட சேவைப்பிரமாணக் குறிப்பும் சகல உள்ளுராட்சி மன்ற செயலாளர் ஊடாக சகல உள்ளுராட்சி உதவியாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு செயலாளர் தெரிவித்தார்.
Related posts:
|
|